குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - விரைவில் அறிக்கை தாக்கல்
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் எட்டாம் நாள் குன்னூர் அருகே நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக் குறித்து முப்படை அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணை செய்தது. விமானப்படை அதிகாரி மாணவேந்திர சிங் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் அறிக்கை தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியில் இருந்த தகவல்கள், விபத்து நேர்ந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்கள், நேரில் கண்டோர் அளித்த சாட்சியங்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments