இந்தியாவில் 27 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு !

0 3606

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றால் 284 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு 9 ஆயிரத்து 249 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், நாடு முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோல் நாட்டில்  ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை  ஆயிரத்து 525ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 460 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 351 பேருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments