இந்தியாவில் 17,59,000 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!
கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் சுமார் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்திய கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியது.
புகாருக்கு ஆளான கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முடக்கப்பட்டதில் 95 சதவீத கணக்குகள், அங்கீகாரமின்றி மொத்தமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மெசேஜிங் மூலமாக 500 புகார்களும், நவம்பரில் 603 புகார்கள் பதிவாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி ஆறுமாத கால அறிக்கையை நவம்பரில் வெளியிட்டிருப்பதாகவும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments