வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா , இந்திய மருத்துவக் கழகம், நேரு நினைவு அருங்காட்சிகம் மற்றும் நூலகம், டெல்லி ஐஐடி உள்ளிட்ட 5 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள், தொண்டு , மருத்துவ, கல்வி நிலையங்கள் போன்றவற்றின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழான உரிமம் நேற்றுடன் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்காததால், அவற்றின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு முதல் இந்த அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. சில அமைப்புகள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை என்றும் சிலவற்றின் கணக்குத் தணிக்கையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Comments