நாளை முதல் சிறார்களுக்குத் தடுப்பூசி - பள்ளிகளில் ஏற்பாடு!
கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவில் உள்ள 15 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டோருக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.பள்ளிகளிலேயே தடுப்பூசியை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயத்துக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை போரூரில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும், பள்ளிகளிலும் சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடரும். கோவின் இணைய தளத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பள்ளிகளில் சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 33 லட்சம் 46 ஆயிரம் சிறார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி உடையவர்களாக உள்ளனர். அதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பள்ளிகளில் படிக்கின்றனர். அதனால், பள்ளிகளில் இடம் ஒதுக்கி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி பணியை ஒருங்கிணைக்க ஆசிரியர் ஒருவரை தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும், பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான மாணவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
Comments