கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு டிஸ்சார்ஜ்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு, பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். கடந்த மாதம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலுவுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எஸ் ஜீன் மாறுபாடும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சைப்பின் குணமடைந்த வடிவேலு, வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments