புத்தாண்டு தின ஏலத்தையொட்டி நூல் விலை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்வு
புத்தாண்டு தின ஏலத்தையொட்டி, நூல் விலை, கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக, திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
நூற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு, மாதம்தோறும் 1-ம் தேதி நூல் விலையை நிர்ணயிக்கப்படுகின்றன. ஏற்கனவே நூல் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி ஆர்டர்களை இழந்து வந்த நிலையில், ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ நூல் 350 ரூபாயாக உள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பின்னலாடை வர்த்தகம் மேலும் கடுமையாக பாதிக்கப்படும், என ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
Comments