தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு உயரும் நிலையில், தொற்று சிகிச்சைக்கான தற்காலிக மையங்களை ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பி உள்ள கடிதத்தில், கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளதால் தனிக்குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவும், மாவட்ட, தாலுகா அளவில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை அமைக்கப்பட்ட சிகிச்சை மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், ஆக்சிஜன் தேவை, மருந்துகளின் கையிருப்பை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிப்பட்டுள்ளது.
Comments