அதிக விலைக்கு தேவஸ்தான காலண்டர், டைரி அமேசானில் விற்பனை.. அமேசான் மூலம் விற்பதை தவிர்க்க வேண்டும் - பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் காலண்டர்கள், டைரிகள் அமேசான் இணையதளத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.
பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் புகைப்படத்துடன் கூடிய 15 ரூபாய் மதிப்புள்ள காலண்டர், அமேசான் இணையதளத்தில் 50 சதவீத தள்ளுபடிக்கு பிறகு 149 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், 130 ரூபாய் மதிப்புள்ள கோயில் தேவஸ்தான டைரி, தள்ளுபடிக்கு பிறகு 499 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
ஷாப்பிங் இணையதளத்தில் திருப்பதி தேவஸ்தான காலண்டர் மற்றும் டைரிகளை அதிக விலைக்கு விற்க அனுமதி வழங்கியது தவறானது என்றும், இந்த வணிகத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் காந்தரப்பு முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், நேரில் வந்து வாங்க இயலாத பக்தர்களுக்காக மட்டுமே அமேசானுடன் ஒப்பந்தம் செய்து விற்கப்படுவதாக தெரிவித்தார்.
Comments