'புளோரோனா' என்ற புதிய வகை வைரஸ் பாதிப்பு இஸ்ரேலில் கண்டுபிடிப்பு
இஸ்ரேல் நாட்டில் புளோரோனா என்ற புதிய வகை நோய் பாதிப்பு கண்டறியட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவென்சா ஆகிய இரண்டு வைரஸ்களின் தொற்று சேர்ந்து புளோரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெட்டா டிக்வா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு குளிர் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு 4ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments