அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் - இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் மிக அதிக அளவிலான உயிரினங்கள் அழிந்து போகும் என WWF எனப்படும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் சுமார் ஒரு மில்லியன் இனங்கள் அழிந்து போகலாம் என்றும் இது டைனோசர் யுகத்தின் முடிவில் இருந்து மிகப்பெரிய வெகுஜன அழிவு நிகழ்வாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள், பனிக்கரடிகள், சுறாக்கள் என 40 ஆயிரம் இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் WWF தெரிவித்துள்ளது. 2035 கோடையில் ஆர்க்டிக் முழுவதுமாக பனி இல்லாமல் இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments