தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான்.. சமூகப் பரவலாக மாறத் தொடங்கியது ஒமைக்ரான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4858

தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு 120ஆக அதிகரித்துள்ளது.

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவோரை நலம் விசாரித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் சமூக பரவலாக மாற தொடங்கியது போல், தமிழகத்திலும் சமூக பரவல் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 66 பேர் குணமடைந்துள்ளதாகவும், இருவர் கேரளாவிலும் எஞ்சியவர்கள் தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments