சீன செல்போன் நிறுவனங்களான ஷியோமி, ஓப்போ தொடர்புடைய இடங்களில் சோதனை ரூ.10,000 கோடிக்கு மேல் முறைகேடு

0 5855

சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் சீன செல்போன் நிறுவனங்களான ஷியோமி, ஓப்போ தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், இரு நிறுவனங்களும் வெளிநாட்டில் உள்ள தங்கள் குழும நிறுவனங்களுக்கு ராயல்டி அடிப்படையில் 5,500 கோடி ரூபாய்க்கு மேல், முறையான ஆவணங்கள் இல்லாமல் பணத்தை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதிரி பாகங்களை வாங்கி செல்போன் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு, அதற்குண்டான வருமானவரி சட்டத்தை முறையாகப் பின்பற்றாமல் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து பெற்ற 5,000 கோடி ரூபாய்க்கு உரிய ஆவணங்களை பராமரிக்காமல் இருந்து வந்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments