இந்தியாவில், டெல்டா வகை கொரோனாவின் இடத்தை பிடிக்கத் தொடங்கிய ஒமைக்ரான்
இந்தியாவில் அதிகளவில் பரவியிருந்த டெல்டா வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசின் இடத்தை ஒமைக்ரான் வகை வைரஸ் பிடிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கொரோனா உறுதியானோரில் சுமார் 80 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு மட்டுமே அறிகுறிகள் உள்ளதாகவும் எஞ்சியவர்களுக்கு அறிகுறியற்ற பாதிப்பே ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி முதலில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 300-ஐ கடந்து உயர்ந்து வருகிறது.
Comments