பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை

0 2842

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரின் Panthachowk பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து நள்ளிரவில் தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மூன்று போலீசார் உட்பட 4 பேர் காயமடைந்தனர். சுஹைல் அகமது ரத்தர் என்ற அந்த தீவிரவாதி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவன் என்றும், சில நாட்களுக்கு முன் காவல்துறை வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டவன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments