நாகைக்கு அதி கனமழை எச்சரிக்கை : சென்னைக்கு மீண்டும் மிக கனமழை அலர்ட்

0 8339

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் புவியரசன், தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கூறினார்.

புத்தாண்டு தினமான நாளைய தினமும் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என அவர் கூறினார்.

2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் எனவும், பின்னர் சில மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் டி.ஜி.பி. அலுவலகத்தில் 24 செண்டி மீட்டர் மழையும், ஆவடியில் 23 செண்டி மீட்டர் மழையும், எம்.ஆர்.சி. நகரில் 21 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்று பெய்த திடீர் கனமழைக்கான காரணம் குறித்து விளக்கமளித்த அவர், கடற்பகுதியில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததே காரணம் எனவும், கணித்தபோது இருந்த வேகத்தை விட, திடீரென வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகரும் வேகம் அதிகரித்து நிலபரப்பிற்கு நகர்ந்து வந்ததால் தான் அதி கனமழை பெய்ததாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments