நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 46 வது ஜிஎஸ்டி கூட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று 46 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிதியமைச்சர் நேற்று பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ,நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறுகிறது.
நீண்ட காலமாக 12 மற்றும் 18 சதவீதத்தை ஒரே சம அளவில் மாற்ற வேண்டும் என்றும், சில குறிப்பிட்ட வகைக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் கடந்த ஜிஎஸ்டி கூட்டங்களில் மாநில அரசுகளால் எழுப்பப்பட்டுள்ளன.
மாநில அமைச்சர்கள் குழு இது தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கை இன்றைய கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்பட உள்ளது.
Comments