காவல் ஆணையர் அலுவலகத்தில் போலி முகவரி கொடுத்த அல்டாப் அன்னபூரணி... ரோகித் ஆத்தாவின் சீடராமாம்..!
அன்னபூரணியை நம்பிச்சென்ற தனது கணவர் அரசு உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அன்னபூரணி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், போலியான முகவரியைக் கொடுத்திருப்பது அம்பலமாகி உள்ளது.
சென்னையில் திடீரென அவதரித்துள்ள சர்ச்சை சாமியாடி அன்னபூரணியின் பின்னணி குறித்து நாளுக்கு நாள் திடுக்கிடவைக்கும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.
அந்தவகையில் டிவி நிகழ்ச்சியில் அடிவாங்கியதோடு அன்னபூரணியுடன் சென்ற அரசு, தனக்கு சொந்தமான கள்ளிக்குப்பம் வீட்டை ஒரு கோடி ரூபாய்க்கு விற்று திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதில் அன்னபூரணியுடன் தங்கி மெடிடேசன் வகுப்புகள் நடத்திவந்துள்ளார்.
அப்போது அவருக்கு உதவியாளராக ரோகித் என்பவர் இருந்துள்ளார். சரியாக 6 மாதம் கழித்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ந்தேதி அரசு மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
அரசு மாரடைப்பில் உயிரிழந்ததாக அன்னபூரணி கூறினாலும், அப்போதே தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசுவின் முதல் மனைவி செல்வி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிணக்கூறாய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்ட அரசுவின் கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த அப்போதைய உதவி காவல் ஆய்வாளர் கோகிலா, விசாரணைக்கு அன்னபூரணி வரவில்லை என்று காரணம் காட்டி வழக்கை அப்படியே கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த வழக்கு விசாரணை குறித்து கேட்ட போது தனக்கு எதுவும் தெரியாதது என பதிலளித்தார் உதவி காவல் ஆய்வாளர் கோகிலா.
அரசு உயிரிழப்பதற்கு முன்பாகவே அவரது வங்கி கணக்கு தொடங்கி சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயருக்கு மாற்றிக் கொண்ட அன்னபூரணி, ஐயப்பந்தாங்கலில் உள்ள ரோகித்தின் வீட்டிற்கு சென்று தங்கி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதன் பின்னர் அரசுவிடம் கற்றுக் கொண்ட மெடிட்டேசன் வித்தைகளை, ரோகித் மேற்பார்வையில் அன்னபூரணி செய்து வந்துள்ளார். மெடிட்டேசன் மூலம் பணம் கொழிக்கத் தொடங்கியதும், அடுத்தக்கட்டமாக அன்னபூரணியை அரசு அம்மா என்று கடவுளின் அவதாரமாக்க நினைத்து, ரோகித் போட்ட மோசடி திட்டம் சறுக்கியதால், போலிச்சாமியாடி பட்டத்துடன், போலீஸில் பாதுகாப்புக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அன்னபூரணி.
3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தனது புகாரை மறுவிசாரணைக்கு எடுத்து தனது கணவர் சாவில் உள்ள மர்மத்தை காவல்துறையினர் விசாரித்து உண்மையை வெளிக்கொணரவேண்டும் என்று செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி தெரிவித்த புகாரில் தான் திருமுல்லைவாயலில் திருமலைவாசன் பவுண்டேசன் குடியிருப்பில் கே 402 என்ற முகவரியில் தங்கி இருந்து இயற்கை ஒளி அமைப்பின் மூலம் ஆன்மீக பணி செய்வதாக கூறியிருந்தார்.
அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது வேறு இருவர் அங்கு வசித்து வரும் நிலையில் , அன்னபூரணி அந்த பகுதியை விட்டுச்சென்று பல ஆண்டுகள் ஆவதாகவும், அங்கு ஆன்மீக பயிற்சி வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை என்பதும் உறுதியானது. போலீசாரிடமே போலியான முகவரி கொடுத்து அன்னபூரணி சுற்றலில் விட்டதும் அம்பலமாகி உள்ளது.
காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வழக்கறிஞர்களுடன் சென்று போலி முகவரி கொடுத்தது ஏன் ? என்று அன்னபூரணியின் ஒருங்கிணைப்பாளர் ரோகித்திடம் கேள்வி எழுப்பியபோது அன்னபூரணி போலவே அவரும், உரிய பதில் சொல்லாமல் நழுவினார்
அன்னபூரணியின் காதல் கணவர் அரசு மர்ம மரண வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்து அன்னபூரணியை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தால் அவரது கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு விடைகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments