அவளா வந்தா ஏத்துப்பேன்... உத்தரவை காட்டி கட்டாயப்படுத்தமாட்டேன்... அதிதிக்கு காத்திருக்கும் அபி..!

0 20980

டிகர் அபி சரவணனைக் காதல் திருமனம் செய்துகொண்டு, தனிக்குடித்தனம் நடத்திய நடிகை அதிதிமேனன், இருவரும் நண்பர்களாகத் தான் பழகினோம் என்று கூறி, பிரிந்து சென்ற நிலையில், இவர்களது திருமணம் சட்டப்படி செல்லும் என்றும், நடிகை அதிதிமேனன் 2 மாதத்திற்குள் அபிசரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி படத்தில் இணைந்து நடித்ததால் காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டவர்கள் அபிசரவணன்- அதிதி மேனன் நட்சத்திர தம்பதியர்.

இருவரும் 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அபிசரவணனுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2018 ஆம் ஆண்டு அதிதிமேனன் பிரிந்து சென்றார்.

தனது மனைவி அதிதிமேனன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகக் கூறிய அபி சரவணன், அவருடன் சேர்ந்துவாழ விரும்புவதாக நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அதிதிமேனனோ தாங்கள் நண்பர்களாக ஒரே வீட்டில் தங்கி இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் மறுத்தார்.

இது தொடர்பான வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில், அதிதிமேனன் தனது பெயரை மிருனா மேனன் என்றும், அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என்றும் மாற்றிக் கொண்டு படத்தில் நடித்து வந்தனர்.

வழக்கு விசாரணை நிறைவுபெற்றதையடுத்து அபிசரவணன், அதிதிமேனன் திருமணம் செல்லும் என்றும், இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அதிதிமேனன், கணவர் அபிசரவணனுடன் இணைந்துவாழ வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அபிசரவணன் என்கிற விஜய் விஷ்வா செய்தியாளர்களைச் சந்தித்தார், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அதிதி மேனன் தன்னுடன்தான் வாழவேண்டும் என்று ஒருபோதும் கட்டாயப்படுத்தப் போவதில்லை என்றும், அதேநேரத்தில் அவருக்காக எப்போதும் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தனது காதல் உண்மையானது என்றும் அதைப் புரிந்து கொண்டு தன்னிடம் அதிதிமேனன் திரும்பி வந்தால் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார் அபிசரவணன்.

கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகளை இருவரும் பேசி தீர்த்துக் கொண்டாலே, இதுபோன்ற வழக்குகளுக்கு வேலையே இருக்காது, சமூகத்தில் அவர்களுக்கு களங்கமும் ஏற்படாது என்கிறார் அபிசரவணன்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments