உ.பி.யில் தேர்தலை தள்ளி வைக்க கூடாது என அரசியல் கட்சிகள் கோரிக்கை - தலைமைத் தேர்தல் ஆணையர்
உத்தரப்பிரதேசத்தில் குறித்த காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கோரியிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் பெருந்திரளாக திரள்வதைத் தவிர்க்க தேர்தலை ஓரிரு மாதம் ஒத்தி வைக்கலாம் என்று அண்மையில் அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தலை குறித்த தேதியை ஒத்தி வைக்க கூடாது என்று அரசியல் கட்சிகள் கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெற்றாலும், பெருந்திரளாக மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் சுஷில் சந்திரா தெரிவித்தார்.தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு டிஜிட்டல் முறை பிரச்சாரம் போன்ற வழிகாட்டு நெறிகள் அறிவிக்கப்படும் என்றும் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
Comments