புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜன. 31 வரை நீட்டிப்பு
பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் படி புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளை இரவு 12.30 மணிக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடைபெறும் பகுதிகள் முழுமையாக அடைக்க வேண்டும் என்றும் அதிகாலை 2 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுந்த ஏகாதசி தினத்தை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை, தேசிய இளைஞர் தின விழா, அரசு விழாக்களை கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் இன்று இரவு 10 மணி முதல் 12.30 மணி வரை வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Comments