அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 10 பேரிடம் ரூ.4.34கோடி மோசடி.! ராஜேந்திர பாலாஜி மீது குவியும் அடுக்கடுக்கான புகார்கள்

0 3750

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக, கும்பகோணத்தைச் சேர்ந்த 2 பேரிடம் அதிமுக நிர்வாகி விஜயநல்லதம்பி மூலம் 21 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி மீது இதுவரை 10 பேர் பண மோசடி புகார் அளித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரிடமும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து மதுரை சரக டிஐஜி காமினி தலைமையில் விசாரணை நடத்தப்படுகிறது.

அத்தோடு, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சீனிவாச பெருமாள், அவரது ஆதரவாளர்கள் என 5 பேரிடமும் விசாரணை நடக்கிறது. ராஜேந்திர பாலாஜி மொத்தமாக 4கோடியே 34லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments