கர்நாடாகாவில் அரசு கட்டுபாட்டில் இருந்து வரும் கோயில்களை விடுவிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
கர்நாடாகாவில் அரசு கட்டுபாட்டில் இருந்து வரும் கோயில்களை விடுவித்து அந்தந்த கோயிலின் அறங்காவலர் குழுவுக்கு நிர்வாக பொறுப்பை ஒப்படைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
ஹுப்பாலியில் நடந்த பாஜகவின் நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய அவர், இந்த புதிய சட்டம் மூலம் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி துன்புற்று வரும் கோயில்கள் விடுவிக்கப்படும் என கூறினார்.
இந்த சட்டத்தை கர்நாடக சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 23-ஆம் தேதி காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கட்டாய மதம் மாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments