காந்தியடிகள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய மதத் தலைவர் காளிசரண் மஹாராஜ் மத்தியபிரதேசத்தில் கைது
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த தர்ம சன்ஸாத் என்னும் மாநாட்டில் காந்தியடிகளை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய காளிசரண் மஹாராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26-ஆம் தேதி நடந்த நிகழ்சியில் பேசிய காளிசரண் மஹாராஜ், காந்தியை சுட்டுக் கொன்றதற்காக கோட்சேவுக்கு வணக்கம் தெரிவிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பிரமோத் தூபே அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினருக்கு இடையே பகையை தூண்டும் வகையில் பேசியதாக காளிசரண் மஹாராஜ் மீது ராய்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் இருந்த காளிசரண் மஹாராஜை சத்தீஸ்கர் போலீசார் கைது செய்தனர்.
Comments