நகைக்கடன் தள்ளுபடியை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கல்
கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடியை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் மற்றும் குடும்ப அட்டை எண்ணை வழங்காத மற்றும் தவறாக வழங்கியர்களுக்கு நகைகக்டன் தள்ளுபடி கிடையாது என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சரியான விபரங்களை கொடுத்தால், அதனை ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நபரே பல கூட்டுறவு வங்கிகளில், பல முறை கடன் பெற்றது உள்பட முறைகேடாக பெற்ற நகைக்கடன்கள் நீங்கலாக தகுதியுள்ள அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக வழங்கப்பட்ட நகைக்கடனில் 50சதவீத கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்கான தகுதியுள்ளது எனவும், அவை அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Comments