கொரோனா தடுப்பூசிகள் ஒமைக்ரானை வீரியத்துடன் எதிர்க்கும் தன்மையுடையவை - சௌமியா சுவாமிநாதன்

0 3366

ஒமைக்ரானுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் பலனளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என அனைவருக்கும் ஒமைக்ரான் தொற்று பரவுவதாக சுட்டிக்காட்டினார்.

ஒமைக்ரான் வேகமாக பரவினாலும், அதன் வீரியம் குறைவாக இருப்பது தடுப்பூசியின் பலனையே காட்டுவதாகவும் சௌமியா சுவாமிநாதன் கூறினார்.

அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்திய அவர், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படுவதாகவும், தடுப்பூசியின் ஆற்றலானது, நபரின் வயது, இணைநோய் ஆகியவற்றை சார்ந்து மாறுபடக் கூடும் எனவும் கூறினார்.

ஒமைக்ரான் பற்றிய சான்றுகளும், தகவல்களும் தற்போது தான் கிடைக்கத் தொடங்கியிருப்பதாகவும், பாதிப்பு பரவும் அதே வேகத்தில் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பாததும், வெண்டிலேட்டர்களுக்கு தேவை அதிகரிக்காததும் நல்ல அறிகுறி எனவும் சௌமியா சுவாமிநாதன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments