செல்பி எடுக்க முயன்ற தொண்டரை தடுத்து நிறுத்திய கர்நாடக காங். தலைவர்.. அனுமதியின்றி செல்பி எடுக்க முயன்றதால் ஆத்திரம்.!
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க முயன்ற தொண்டரை கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவக்குமார் கோபத்துடன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வெளியேறிய போது கூடியிருந்த தொண்டர்களில் ஒருவர் செல்பி எடுப்பதற்காக அவர் முகத்திற்கு முன்பாக செல்போனை நீட்டியதால் ஆத்திரம் அடைந்தார்.
உடனடியாக தொண்டரின் கைகளைப் பிடித்த சிவக்குமார் செல்பி எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
Comments