மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள்.. ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை.!
மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தாஹிசர் கிளையில் பகல் நேரத்தில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத 2 முகமூடிக் கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்து ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பணத்தை பறித்து தப்பிச் சென்ற கொள்ளையரைப் பிடிக்க போலீசார் 8 தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர்
Comments