விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 20,000 கோடி செலுத்துகிறார் பிரதமர் மோடி.!
பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை புத்தாண்டு தினத்தில் செலுத்த உள்ளார்.
இதில் பத்து கோடி பேர் பயன் பெறுவார்கள். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுின் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு மூன்று முறை இத்தொகை பிரித்தளிக்கப்படுகிறது.
இது பத்தாவது தவணையாகும். இது வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 1 புள்ளி 6 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த காணொலி நிகழ்வின் போது 351 விவசாய அமைப்புகளுக்கான விவசாய உற்பத்தி நிதியாக 14 கோடி ரூபாய் நிதியை பிரதமர் வழங்குவார். இதில் சுமார் ஒன்றே கால் லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதையடுத்து காணொலி வாயிலாக பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார். அவருடன் வேளாண்துறை அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
Comments