மும்பை வீதிகளில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற நடிகர் சல்மான் கான்.!

0 3995

அடையாளத்தை மறைக்க தலையில் தொப்பியணிந்து டிசர்ட்டுடன் மும்பை வீதிகளில் நடிகர் சல்மான் கான் ஆட்டோ ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பன்வேல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தமது 56 வது பிறந்தநாளை சல்மான் கான் கடந்த சனிக்கிழமையன்று கொண்டாடினார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. உடனடியாக அவர் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மறுநாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவர் பாம்புடன் படம் பிடித்து நட்பாகி விட்டதாக குறிப்பிட்டார், பாம்பைக் கொல்லவில்லை என்றும் சல்மான் கான் தெரிவித்தார்.இதையடுத்து தனது விலையுயர்ந்த காரை விட்டு விட்டு ஜாலியாக ஆட்டோவை ஒட்டியபடி நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments