துணை ராணுவ வீரர்களுக்கு அடுத்த மாதம் பூஸ்டர் டோஸ் போடப்படும்.. மத்திய அரசின் உயர் அதிகாரி தகவல்.!
துணை ராணுவ வீரர்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துணை ராணுவப்படைகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி. போன்ற பிரிவுகள் முன்கள பணியாளர்கள் பட்டியலில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் சுமார் 3லட்சத்து 25ஆயிரம் வீரர்களை கொண்ட சி.ஆர்.பி.எப். படைப்பிரிவில் 99 புள்ளி 74 சதவீதம் பேர் இரு டோஸ்களையும் போட்டிருப்பதாகவும், தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வேகம் எடுத்திருப்பதால் அது குறித்து வீரர்களுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் சி.ஆர்.பி.எப். மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments