பெண் சிசு கொலைகளை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்
பெண் சிசு கொலைகளை தடுக்க தனிக்குழு அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உசிலம்பட்டியில் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுவதை சுட்டிக்காட்டி, இந்த விவகாரங்களில் தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்தப்படும் என்றார்.
Comments