சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும் - மாநகராட்சி உத்தரவு

0 2118

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அனுமதி இன்றியும், விதிகளை மீறியும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், விளம்பரத் தட்டிகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி அறிவுறுத்தலின்படி பேனர்களை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அபராதம் வசூலிக்கவும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவு மீதான நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments