அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம் - அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

0 2423

மதுரை திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெயர்பலகையை புதுப்பிப்பதற்காகவே ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையிலும், அதிமுகவினர் அம்மா உணவகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகராட்சி ஆணையர், அங்கு மீண்டும் ஜெயலலிதா புகைப்படம் அமைக்க உத்தரவிட்டதையடுத்து அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments