இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களை மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

0 2533

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தபோது, மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. மீனவர்களை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக இலங்கை வெளியுறவு துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு பதில்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஜனவரி மாத தொடக்கத்திலேயே 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தை சந்திக்கும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தி விசாரணையை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments