மின்சார ஸ்கூட்டர்களுக்கான சார்ஜிங் முனையங்கள் அமைக்கத் தொடங்கியது ஓலா!
மின்சார ஸ்கூட்டர்களுக்கான சார்ஜிங் முனையங்களை அமைக்கத் தொடங்கியுள்ள ஓலா நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் நாலாயிரம் சார்ஜிங் முனையங்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது.
எஸ்1, எஸ்1 புரோ ஆகிய இருவகை மின்சார ஸ்கூட்டர்களைத் தயாரித்துள்ள ஓலா நிறுவனம், அவற்றை முன்பதிவு செய்தோருக்கு வழங்கி வருகிறது. இந்த ஸ்கூட்டர்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான முனையங்களை அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளது.
பாரத் பெட்ரோலியம் பங்குகள், குடியிருப்பு வளாகங்கள் ஆகியவற்றில் ஹைப்பர் சார்ஜர்களை நிறுவி வருவதாகவும், இவை அடுத்த எட்டு வாரங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் ஓலா எலக்ட்ரிக் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஜூன் 22 வரை சார்ஜிங் முனையங்களைப் பயன்படுத்தக் கட்டணமில்லை என்றும் அறிவித்துள்ளார்.
Comments