ராஜேந்திர பாலாஜி பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் - அமைச்சர் சா.மு.நாசர்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாகவும், விரைவில் அவரை பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
தேனியில் ஆவின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஆவின் நிறுவனத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளுக்கும் ராஜேந்திரபாலாஜி தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
Comments