ஆர்.எஸ்.எஸ் மீது பழி சுமத்திய காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் ; ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல்

0 5521
ஆர்.எஸ்.எஸ் மீது பழி சுமத்திய காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்

மாலேகான் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் மீது பழி சுமத்திய காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.

மாலே கான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சியம் அளித்த ஒருவர், தாம் தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் துன்புறுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டு மிரட்டப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக பொய் சாட்சி அளித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் யார் என்றே தெரியாத காலத்தில் அவர் மீதும் பழிசுமத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்த சாட்சி தெரிவித்துள்ளார். இந்துத்துவா அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் பொய்ப் பழி சுமத்திய, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகித்த காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments