வண்ணமயமான ஆடைகள் அணிந்து முகக்கவசத்துடன் நடனமாடி புத்த பிக்குகள் கொரோனா விழிப்புணர்வு
பீகார் மாநிலம் போதிகயாவில் உள்ள ஒரு பூட்டான் புத்த மடத்தில் பிக்குகள் வண்ண மயமான ஆடைகள் அணிந்து முகக்கவசத்துடன் கொரோனாவை குறித்த விழிப்புணர்வை பரப்ப நடனம் ஆடினர்.
உலக அமைதிக்கும் தீய சக்திகள் மறையவும் புத்தாண்டில் உலகம் நல்வாழ்வை அடையவும் வேண்டிக் கொண்டு பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி நடனம் ஆடிய புத்த பிக்குகள் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
முகக் கவசம் அணிவது தீய சக்திகளை விரட்டுவதாக புத்த பிக்குகள் இடையே நம்பிக்கை மரபாகவே உள்ளது.
Comments