எஸ் வங்கி நிறுவன வழக்கில் நீதிமன்றத்திற்கு தேவையற்ற குறிப்புகள் அனுப்பிய சிபிஐ அலுவலக அதிகாரி கைது
எஸ் வங்கி நிறுவன வழக்கில் நீதிமன்றத்திற்கு தேவையற்ற குறிப்புகள் அனுப்பிய சிபிஐ அலுவலக அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் மற்றும் பலர் சம்பந்தப்பட்ட வழக்கின் கோப்புக்களை சிபிஐ அதிகாரிகள் படித்துப் பார்த்த போது, வழக்கின் குறிப்புகளைத் தவிர சமீர் கெலாட்டையும், பிந்து ராணாவை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கக் கோரும் குறிப்பிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்தக் குறிப்பில் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் கையெழுத்திட்டதாகக் காட்டப்பட்டது. இது தவறான தகவல் என்பதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் பணியாற்றி வரும் சுமீத் குமார் என்பரை சிபிஐ அதிகாரிகளே கைது செய்துள்ளனர்.
Comments