பெண் தலைமைக் காவலர் வீட்டில் துணிகரம்.. ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள நகை- பணம் கொள்ளை.!
சென்னையில், தலைமை பெண் காவலர் வீட்டில் ஆறரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் உள்ள தலைமை காவலர் குடியிருப்பில் சத்யா என்பவர் வசித்து வருகிறார். திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர்,குடும்பத்துடன் திருத்தணி சென்றுள்ளார்.
இந்நிலையில், சத்யாவின் வீட்டு தாழ்ப்பாள் உடைந்து கிடப்பதை கண்டு, பக்கத்து வீட்டில் வசிக்கும் காவலர் சிவக்குமார் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்துள்ளது.
இதுபற்றி சத்யாவிடம் தொலைபேசியில் கேட்டபோது வீட்டில் 14 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
Comments