இந்தியாவில் 28லட்சம் ஹெக்டேர் நிலம் எண்ணெய் சாகுபடிக்கு உகந்தது - மத்திய அமைச்சர் தோமர் தகவல்

0 1898

இந்தியாவில் 28 லட்சம் ஹெக்டேர் நிலம் எண்ணெய்ப் பனை சாகுபடிக்கு உகந்தது என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பேசிய அவர், இதனை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்ட முடியும் என்றார். எண்ணெய்ப் பனைக்காக விதைகளை அதிகரிப்பது தொடங்கி, சுத்திகரிப்பு ஆலைகளை உருவாக்குவது வரை அனைத்துக்கும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

தரமான எண்ணெய்ப் பனை விதைகளைப் பெறுவதற்காக வெளிநாடுகளில் உள்ள தூதர்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தோமர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments