மகாராஷ்டிராவில் இரவுநேர ஊரடங்கால் கூட்டம் குறைந்து காணப்படும் சாலைகள்!
மும்பையில் நேற்றிரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
மக்கள் பெரும் கூட்டமாகத் திரளும் பாந்த்ரா உள்ளிட்ட மையப் பகுதிகளில் இதனால் கூட்டம் குறைந்தது. சாலைகளின் போக்குவரத்தும் அதிகமாக இல்லை. போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
மகாராஷ்ட்ராவில் மட்டும் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களும் களையிழந்து காணப்படுகின்றன
Comments