நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார்

0 19619
நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது புகார்

மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து, தமிழக அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இதில் தி.நகரிலுள்ள கட்டிடம் ஒன்றை அபகரிக்கும் நோக்கில், அந்த கட்டிடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்வதற்கு நடிகர் மன்சூர் அலிகான் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நடிகர் மன்சூர் அலிகானை எச்சரித்துள்ள சொத்தாட்சியர், அவர் மீது தி.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments