மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை அருகில் இருந்து ரசிக்க தற்காலிக பாதை திறப்பு
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் அருகில் இருந்து அலையை ரசிக்கும் வகையிலான தற்காலிக பாதை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மணல் பரப்பில் நிறுவப்பட்ட மரப் பலகைகள் வழியாக சக்கர நாற்காலிகளில் சென்று மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை ரசித்து வந்தனர். இந்த ஆண்டு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு இதற்காக பிரத்யேக சக்கர நாற்காலிகளும் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ஜனவரி 16ஆம் தேதி வரை இந்த தற்காலிகப் பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
இதனிடையே மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கான ரைட்ஸ் திட்டத்துக்கு முதற்கட்டமாக 2 கோடியே 58 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
Comments