கடுங்குளிரில் இருந்து வீரர்களை காக்க பிரத்யேக ஆடையை வடிவமைத்தது டி.ஆர்.டி.ஓ
எல்லையோரப் பகுதிகளில் நிலவும் கடுங்குளிரில் இருந்து பாதுகாப்புப் படை வீரர்களை காக்கும் வகையில் பிரத்யேக ஆடையை வடிவமைத்த டி.ஆர்.டி.ஓ., அதற்கான தொழில்நுட்பத்தை இந்திய ராணுவத்திடம் வழங்கியுள்ளது.
கடுங்குளிர் நிலவும் சியாச்சின் போன்ற உயரமானப் பகுதியில் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குளிர் தாங்கும் உடைகள் மற்றும் மலையேற்ற உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குளிர் காக்கும் ஆடையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட டி.ஆர்.டி.ஓ அதற்கான தொழில்நுட்பத்தை ராணுவத்திடம் வழங்கியது. டி.ஆர்.டி.ஓ.வின் ஆடை 15 டிகிரியில் இருந்து மைனஸ் 50 வரையிலான கடுங்குளிரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Comments