ஷாங்காய் விமான நிலையத்தில், புதிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் : நடுவானிலேயே திரும்பிச் சென்ற அமெரிக்க விமானம்
ஷாங்காய் விமான நிலையத்தில் புதிய கொரோனா கால சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி, அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று நடுவானிலேயே திரும்பிச் சென்றதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் விமான நிலையத்திற்கு இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை, தைவானை சேர்ந்த இரு விமான நிறுவனங்கள் ஏற்கனவே குறைத்துவிட்டன.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 2-வது மிகப்பெரிய விமான நிறுவனமான டெல்டா, விமானத்தை தரையிறக்காமல் திரும்பியதற்கு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீனத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், சமீப காலமாக அமெரிக்காவில் இருந்து சீனா செல்லும் விமானங்கள் தாமதமாகிறது அல்லது அடிக்கடி ரத்தாகிறது, என்றும் சீனத் தூதரகம் விமர்சித்துள்ளது.
Comments