தங்கம் என நினைத்து மூதாட்டி அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துச் சென்ற இளைஞர் கைது

0 6968
தங்கம் என நினைத்து மூதாட்டி அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துச் சென்ற இளைஞர் கைது

நெல்லை மாவட்டம் முக்கூடலில் தங்கம் என நினைத்து மூதாட்டி அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துச் சென்ற 19 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

முக்கூடல் சுப்பையா தெருவை சேர்ந்த 80 வயதான பொன்மணி வீட்டுவாசலில் அமர்ந்து கொண்டிருந்த நிலையில், அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், அருகில் உள்ள கிளினிக்கிற்கு வந்ததாகவும், குடிக்க கொஞ்சம் தண்ணீர் தரும்படியும் கேட்டுள்ளார்.

அப்போது அந்த மூதாட்டி உள்ளே தண்ணீர் இருக்கிறது குடித்துக்கொள் என்று கூறி அந்த இளைஞரை உள்ளே அனுமதித்த நிலையில், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை நோட்டமிட்ட அந்த இளைஞர், அது கவரிங் சங்கிலி என்பது தெரியாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றான்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அருகிலுள்ள கிளினிக்கிற்கு வந்து சென்றவர்களின் பதிவேட்டை வைத்து அதே பகுதியை சேர்ந்த இம்மானுவேல் ஞானபிரவீன் என்ற இளைஞனை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments