தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவரின் 293 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையினர்.!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் தலைவரின் 293 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எம்ஜிஎம் மாறன் என்ற அவர், சிங்கப்பூரில் கடந்த 2005 மற்றும் 2006ஆம் நிதியாண்டுகளில் இரு நிறுவனங்களை இணைத்து அதில் ஐந்து கோடியே 30 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை முதலீடு செய்துள்ளார்.
இதற்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியை அவர் பெறவில்லை. இந்தியக் குடிமகனான ஒருவர், ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல், வெளிநாட்டில் முதலீடு செய்வது குற்றம்.
அதனால், அவர் முதலீடு செய்த தொகைக்கு ஈடான 293 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு இந்திய நிறுவனங்களின் பங்குகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments