ஒரே பதிவு எண்ணில் இயக்கப்பட்ட 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல் ; 3 பேர் கைது

0 3248
ஒரே பதிவு எண்ணில் இயக்கப்பட்ட 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

காரைக்காலில் ஒரே பதிவு எண்ணில் இயக்கப்பட்ட 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், தனியார் டயர் கம்பெனி பிரதிநிதி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, தனியார் டயர் கம்பெனி அருகே உள்ள காலிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களில், TN.68 P.5965 என்ற ஒரே பதிவு எண் இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், 3 சரக்கு வாகனங்களில் ,ஒரு வாகனத்திற்கு மட்டும் அனுமதி, காப்பீடு, உள்ளிட்ட சான்றிதழ்கள் எடுத்து அதன் நகலை கொண்டு மற்ற 2 வாகனங்களுக்கும் அனுமதி பெறாமல் அதிகாரிகளை ஏமாற்றி இயக்கியது தெரிய வந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments